யாழில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

10.08.2023 09:26:12

யாழ்ப்பாணம், அச்சுவேலி அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது.

கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.