30 வயதுக்கு மேற்பட்வர்களுக்கு ஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க என்.ஏ.சி.ஐ. பரிந்துரை!
26.04.2021 10:54:01
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) மாகாணங்களை பரிந்துரைத்துள்ளது.
ஆனால், வயதைக் குறைக்க அவர்கள் தயாராக இல்லை என்று ஒன்றாரியோ அரசாங்கம் கூறுகிறது.
எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கு (ஃபைஸர் மற்றும் மொடர்னா) காத்திருக்க விரும்பாதவர்களுக்கான பரிந்துரை இது என்று என்ஏசிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக என்ஏசிஐ மருத்துவர்கள் ஒவ்வொரு மாகாணத்தையும் வலியுறுத்துகின்றனர்.
தடுப்பூசி தொடர்பாக ஒன்றாரியோ அதன் சொந்த கொள்கையை அமைக்கும்.