காலியாகப்போகும் மொட்டு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சி சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சியிருப்பர் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranattunga) தெரிவித்துள்ளார்.
திவுலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (4) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு பெரும்பான்மை
அத்துடன் அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் பிரச்சினை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) ஆதரிப்பதில் உறுதியாக உள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
ரணிலுக்கே ஆதரவு
பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.