தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச்சென்ற மேலும் 10 பேர்!!

23.03.2022 07:00:35

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக மேலும் 10 பேர் சென்றுள்ளதாக  தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு ஆறுபேர் நேற்று காலையும் நேற்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேரை ஏற்றிச்  சென்ற இலங்கைப் படகுகள் தனிஸ்கோடியில்  கரை சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

காலையில் சென்றவர்கள் இராமேஸ்வரம் அரிச்சல் முனையில் உள்ள 4வது திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இலங்கையில் நிலவும்   பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இவ்வாறு அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.