மீண்டும் தோற்கடிக்கப்பட்டது யாழ்.மாநகரசபை வரவு – செலவுத்திட்டம்!

28.02.2023 16:57:33

யாழ்.மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் இன்றும் தோற்கடிக்கப்பட்டது. இன்று தாக்கல் செய்யப்பட்ட வரவு – செலவுத்திட்டம் 06 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பதவியிழந்தவராகிறார். சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும்

மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.