தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா ?
24.08.2021 09:30:20
தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்த மக்களை மீட்பதற்கான காலக்கெடு நெருங்குவதால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மக்களை மீட்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று கோரியிருக்கின்றன.
முற்றிலுமாக வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதிபர் ஜோ பைடன் முடிவெடுப்பார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.