தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்!
|
3 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனிடையே அதிமுக இரு தரப்பாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வந்தது. |
|
இதில், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், கட்சி கட்டுப்பாட்டை மீறி தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்தது. எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் எம்எல்ஏ ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம், முதல்வர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. |