அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை!

31.03.2025 07:00:00

“அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல” என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல எனவும், அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும், எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்  ”முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற  சம்பவங்களில் குறித்த கைதிகளுக்கு தொடர்பு  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவை எளிதாக எடுத்துவிட முடியாது எனவும்,  சமூகத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக எவரும் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும் எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.