ஊடகவியலாளரின் தந்தை படுகொலை
இஸ்ரேலிய போர் விமானங்கள் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷரீப்பின் வீட்டின் மீது நடத்திய குண்டுவீச்சில், அவரது தந்தை ஜமால் கொல்லப்பட்டார்.
அல்-ஜசீராவின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவத்திலிருந்து அல்-ஷரீஃப் ற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு பின்னர் இடம்பெற்ற தாக்குதல்
தனது தந்தை ஜமால் (65) வசித்த வீட்டை இஸ்ரேலிய விமானம் குறிவைத்ததாக அல்-ஷரீப் அல்-ஜசீராவிடம் கூறினார்.தொடர்ச்சியான இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக உடனடியாக வீட்டை அடைய முடியவில்லை என்றும் அல்-ஷரீப் கூறினார்.
பல இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள ஐ.நா பள்ளியின் முற்றத்தில் அல்-ஷரீப்பின் தந்தை அடக்கம் செய்யப்பட்டார்.
பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அல்-ஜசீராவிடம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் பாலஸ்தீன புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட வேண்டாம் என்று பலமுறை கேட்டுக் கொண்டதாக கூறினார்.
ஆக்கிரமிப்பாளர்களின் குற்றச்செயல்கள் வெளிப்படுத்தப்படும்
காசா பகுதியில் இஸ்ரேல் போர் பற்றிய செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு இஸ்ரேலிய படையினரிடமிருந்துது தனக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர் வெளிப்படுத்தினார்.
இருப்பினும், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் குற்றங்களை தொடரந்து வெளியிடப்போவதாக அல்-ஷரீப் உறுதியளித்தார்.