நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம்

28.05.2024 07:00:00

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த நிக்கோலா சச்தேவ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமணம் விரைவில் நடக்கும் என்று கூறப்பட்டது.
 

இந்த நிலையில் தற்போது ஜூலை இரண்டாம் தேதி நிக்கோலா சச்தேவ்  மற்றும் வரலட்சுமி திருமணம் நடைபெற இருப்பதாகவும் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக தாய்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மும்பையிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் திருமணத்திற்கு முந்தைய நாள் சென்னையில் மெஹந்தி விழாவும் திருமணத்திற்கு பின் சென்னையில் வரவேற்பு விழாவும் நடத்த சரத்குமார் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

நிக்கோலா சச்தேவ் - வரலட்சுமி திருமணத்திற்கு தமிழ் மற்றும் பாலிவுட் திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.