புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை காணொளியில் திறந்து வைத்தார் முதலமைச்சர்

17.11.2021 07:34:15

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை காணொளியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.23.78 கோடி மதிப்பிலான மாணவர் விடுதி கட்டடங்கள் மற்றும் பள்ளிக்கு கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

கால்நடைத்துறை பராமரிப்புத்துறையில் கருணை அடிப்படையில் 23 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.