உயிரிழப்பு எண்ணிக்கை 410 ஆக அதிகரிப்பு!

02.12.2025 13:56:18

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களையும் பாதித்த தற்போதைய அனர்த்த நிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 410ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய இற்றைப்படுத்தலின்படி தொடர்ந்து நாட்டை வெள்ளங்கள், நிலச்சரிவுகள், மோசமான வானிலை பாதிக்கின்ற நிலையில் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர 565 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், 20,271 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் வானிலை மேம்படுகின்றபோதும் 233,015 பேர் நாடு முழுவதும் இடம்பெயர்ந்துள்ளதுடன், 1,441 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.