இந்தியாவின் பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி!
|
பிரளய் ஏவுகணையை இந்தியாவின் ராணுவ தயாரிப்பு நிறுவனம் டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ என்ற ராணுவ ஆராய்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது. இவ்வாறு இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்படும் ஆயுதங்களை டி.ஆர்.டி.ஓ நிறுவனம் சோதனை செய்து இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும். |
|
அந்த வகையில் டி.ஆர்.டி.ஓ அமைப்பு, குறைந்த தூர இலக்குகளை தாக்கக்கூடிய பிரளய் என்ற ஏவுகணையை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்துள்ளது. பிரளய் ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் துல்லியம் கொண்ட ஏவுகணையாகும். பல ஆயுதங்களை சுமந்து செல்லும் சக்தி கொண்ட இந்த பிரளய் ஏவுகணை, கிட்டத்தட்ட 150 முதல் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த கொடூரம்: 63 வயது பெண் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த கொடூரம்: 63 வயது பெண் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் சோதனை வெற்றி இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு டி.ஆர்.டி.ஓ இரண்டு பிரளய் ஏவுகணைகளை ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இரண்டு ஏவுகணைகளும் வகுக்கப்பட்ட பாதையை பின்பற்றி சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ஏவுகணையின் வெற்றியை வெகுவாக பாராட்டியுள்ளார். |