இலங்கை ஒத்துழைக்க மறுத்தாலும் பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படும் என்ற தெளிவான செய்தியை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தெரிவிக்கவேண்டும்- மனித உரிமை ஆணையாளர் அறிக்கை குறித்து மன்னிப்பச்சபை

28.01.2021 08:25:30

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு காணப்பட்டாலும் காணப்படாவிட்டாலும் பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படும் என்ற தெளிவான செய்தியை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்பை வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அந்தநாட்டின் முயற்சிகள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடுமையான அறிக்கையை தொடர்ந்து இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்நிலவரத்திற்கு தீர்வை காண்பதற்கான அவசரநடவடிக்கைகளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை எடுக்கவேண்டும் என மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற நிலையில் வரலாற்று குற்றங்களிற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை தோல்வியடைந்துள்ளமை இலங்கையில் மனித உரிமை நிலரவம் மோசமடைகின்றது எதிர்கால மனித உரிமை மீறல்களிற்கான ஆபத்தை பெருமளவிற்கு அதிகரித்துள்ளது என்ற முன்னெச்சரிக்கைகளிற்கு வழிவகுத்துள்ளது என மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை தெரிவிப்பதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.


ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை அறிவித்தது என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை தனது சொந்த நல்லிணக்க பொறுப்புக்கூறும் நடைமுறைகளை பின்பற்றப்போவதாகவும் தெரிவித்திருந்தது என குறிப்பிட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் நீதியை வழங்குவதில் இலங்கையின் மிகமோசமான வரலாற்றை யும் அது அந்த நாட்டின் மனித உரிமைகள் மீது செலுத்தியுள்ள மோசமான தாக்கத்தையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களின் பாரதூரதன்மை இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவை தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வெளிபபடுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக உள்நாட்டு பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் வெளிப்படையாக தோல்வியடைச்செய்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறும் இலங்கையின் தீர்மானம் காரணமாகவும்இமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட சிறிதளவு முன்னேற்றங்களிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் கருத்தில்கொள்ளும்போது இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற தெளிவான செய்தியை இலங்கைக்கு மனித உரிமை பேரவை தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை மேலும் தீவிரமாக கண்காணிப்பதற்கு- மனித உரிமை நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு- எதிர்கால விசாரணைகளிற்கு அவசியமான ஆதாரங்கள் தடயங்களை சேகரித்து பாதுகாத்து வைப்பதற்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கை குறித்து தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ள கனடா மொன்டிநீக்ரோ வடக்குமெசெடேனியா ஜேர்மனி மற்றும் பிரிட்டனின் மீதே அனைவரினதும் கவனம் உள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளின் உதவியுடன்;இ ஐக்கியநாடுகளின் கடுமையான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளிற்கு நம்பகதன்மை மிக்க விதத்தில் பதிலளிக்கும் அர்த்தபூர்வமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான பொறுப்பு இந்த ஐந்துநாடுகளுக்கும் உள்ளது என டேவிட்கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார்.