1412 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்படவர்களின் போராட்டம்
30.12.2020 12:55:26
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 1412 ஆவது நாளாகவும் இன்றும் (30) தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.