யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்த அனிருத்.. வித்யாசமான முறையில் வீடியோ
யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு, நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரை பதிவிட்டு வந்தனர். பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி மற்றும் பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில், எனது அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசை அமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பெயரை கீழே பதிவிடுங்கள், அதைச் செய்வோம்! என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் பெயர்களை பதிவிட்டு வந்தனர். மேலும் பலரும் அனிருத் என்று தங்களின் விருப்பத்தை பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, அவர்களின் விருப்பத்திற்கு இனங்க அனிருத்துடன் இணையவுள்ளதாக வித்யாசமான முறையில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.