
'கோமாளி' இயக்குனரின் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்த படம் 'கோமாளி'. கமர்ஷியலாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தன்னுடைய இரண்டாவது படத்தின் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இது பற்றிய அறிவிப்பை தன்னுடைய டுவிட்டரில், “பள்ளியில் படித்த போது, 'பையா' படத்தின் பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்ட காலத்தில், லெஜன்ட் யுவனுடன் வேலை செய்வேன் என்று நினைத்துப் பார்த்தேனா?. வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப்பின் டுவீட்டை ரீ-டுவீட் செய்து யுவன், “இதற்காக மிக்க கிழ்ச்சி. இந்த அற்புதமான படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.
எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள இப்படத்தில் பிரதீப்பே நாயகனாக நடித்து, இயக்கவும் உள்ளார்.