வீடு திரும்பினார் அஜித்

11.03.2024 00:00:00

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நடிகர் அஜித் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கின. மருத்துவமனையில் முழு பரிசோதனை செய்யவே அவர் சென்றிருப்பதாக சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்த நிலையில் அந்தப் பரிசோதனையின் முடிவில், அவரின் காதின் கீழ் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து அக்கட்டியை அரைமணிநேரத்தில் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து தற்போது, அவர் வீடு திரும்பியதாக அஜித்தின் மேளாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தவாரம் முதல் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்