கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளில் இலங்கைக்கு 14 ஆவது இடம்

26.08.2021 05:50:45

சர்வதேச தரவுகளின் அடிப்படையில், நேற்றைய நாளில் கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 14 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்றைய நாளில், சர்வதேச ரீதியில் அமெரிக்காவில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

1,230 இற்கும் அதிகமான மரணங்கள் அங்கு பதிவானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக ரீதியில் நேற்றைய நாளில், 10,800 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, சர்வதேச கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.