சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட 50 இலங்கையர்கள் கைது

01.08.2022 10:47:30

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ கொலிஞ்சாடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து மற்றும் மகிழுந்து ஒன்றில் பயணித்த போதே இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவதுடன் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.