ராஜபக்சர்களின் கபளீகரத்தை முறியடிக்க இதுவே வழி !

12.12.2021 18:28:52

ராஜபக்ச அரசாங்கத்தின் கபளீகர நடவடிக்கைகள் முற்றுப்பெற வேண்டுமாயின் அரசியல் அமைப்பிலுள்ள அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து மேற்கொண்ட சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் மாகாண சபைகளின் முடக்கத்தை தமக்கு சாதகமாக, கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறினார்.

13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்படுவது குறித்தும் இக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.