அல்குவைதா தலைவர் கொலை
23.10.2021 17:41:20
சிரியாவில் நடந்த வான்வழி தாக்குதலில் அல்குவைதா முக்கிய தலைவர் அப்துல் ஹமீது கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க படை வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகினர். இதற்கு பழி தீர்க்கும் வகையில் வட மேற்கு சிரியாவில் அமெரிக்க படையினர் விமானம் மற்றும் டூரோன் மூலம் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்துல் ஹமீது அல் மதார் என்பவர் பலியானார். இதனை ராணுவ தகவல் தொடர்பாளர் மேஜர் ஜான்ரிக்ஸ்பி கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் சிரியாவின் அல் குவைதா கமாண்டர் சலீம் அபுஅகம்மது கொல்லப்பட்டார். தற்போது மேலும் ஒருவர் மரணத்தால் பயங்கரவாத அமைப்புக்கு இழப்பாக கருதப்படுகிறது.