பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

21.07.2022 11:09:32

இந்தி திரையுலகில் பிரபல தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் உர்ஃபி ஜாவேத். இவர் 2016-ஆம் ஆண்டு இந்தி மொழியில் உருவான 'படே பாய்யா கி துல்ஹனியா' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பின் சந்திரா நந்தினி, மேரி துர்கா, ஜிஜி மா, தாயன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சிறிது நாட்களே இருந்தாலும் அவருக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார். கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள உர்ஃபி ஜாவித், சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு கவர்ச்சி உடை அணிந்து வந்து சலசலப்பை உருவாக்கினார்.

தற்போது இவர் கவர்ச்சி உடை அணிந்து பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மோசமான கவர்ச்சி உடையில் உர்ஃபி ஜாவித் இருக்கும் புகைப்படத்தை பலரும் கலாய்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.