போராட்டகாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு

13.07.2022 00:05:00

போராட்டகாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு

கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து நாளைய தினம் தாம் நாட்டுக்கு அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்யுமாறு போராட்டகாரர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து,அரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஐடிஎன் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான இராணுவ மற்றும் விமானப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.டி.என் இரண்டின் நிர்வாகமும் சில போராட்ட குழுக்களால் அணுகப்பட்டதாகவும், அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்பும் அறிக்கைகளை நாளை நேரலையில் ஒளிபரப்புமாறு கோரியதாகவும் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிப்பு

இருப்பினும் இரு நிர்வாகங்களும் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டன. இந்த இரண்டு ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, SLRC மற்றும் ITN வளாகத்தைப் பாதுகாக்க நூற்றுக்கணக்கான துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.