ரஜினி படத்தில்மீண்டும் நயன்தாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இணைந்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு, ஐந்து ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தும் நயன்தாராவும் மீண்டும் திரையில் ஒன்றாக இணையவுள்ளனர். 'தலைவர் 173' என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இத்திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்குகிறார். இக்கதைக்களத்தை மருத்துவ உலகை சார்ந்த படமாக தயாரிப்பாளர் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
அக்டோபர் 25, 2026 அன்று, படக்குழுவினர் நயன்தாரா இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதை அறிவிக்கும் சிறப்பு போஸ்டர் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தினர். ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா கூட்டணி சந்திரமுகி , குசேலன்), தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜூன் 24, 2026 அன்று கமல்ஹாசன் 'தர்மன்' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டார். அதில் ரஜினிகாந்த் மருத்துவமனை பின்னணியில், நீல நிற அறுவை சிகிச்சை உடையில் தீவிரமான தோற்றத்தில் காணப்பட்டார். நயன்தாரா கடைசியாகக் கவின் ராஜுடன் நடித்த 'ஹாய்' மற்றும் யாஷ் நடித்த 'டாக்ஸிக்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். ரஜினி-நயன்தாரா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.