
மேற்கு ஜேர்மனியில் மும்மடங்கான தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு!
ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கன்சர்வேட்டிவ் சேன்ஸலர் மெர்ஸின் சமூக ஜனநாயகக் கட்சியுடனான நான்கு மாத தேசிய கூட்டணிக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மேற்கு மாகாணமான North Rhine-Westphalia-வில் கவுன்சில், மாவட்டம் மற்றும் மேயர்களுக்கா வாக்கெடுப்பு முடிவடைந்த பிறகு, ஜெர்மனிக்கான மாற்று (AfD) கட்சிக்கான ஆதரவு 2020 முதல் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 16.5% ஆக உள்ளது. |
மெர்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சி 34 சதவீத வாக்குகளைப் பெற்று, வலுவான நிலையில் இருந்தாலும், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே அளவாகும். SPD கட்சி 24.3 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் SPD கட்சியின் தலைவர் Olaf Lies தெரிவிக்கையில், மாகாணத்தில் AfD கட்சியின் வளர்ச்சியை கவலையுடன் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் North Rhine-Westphalia மாகாணத்திலேயே வசித்து வருகின்றனர். SPD கட்சியுடன் மெர்ஸின் எதிர்பாராத கூட்டணி ஜேர்மனியின் மந்தமான பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் குறித்த வாக்காளர் கவலைகளைச் சமாளிக்கத் தவறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்தோரை நாட்டில் கட்டுப்படுத்துவதே முதன்மை நோக்கம் என செயல்பட்டு வரும் AfD தங்கள் செல்வாக்கை கிழக்கிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு வியாபிக்க திட்டமிட்டு வருகின்றனர். தற்போதைய இந்த முன்னேற்றம் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என்றே AfD துணைத் தலைவர் Tino Chrupalla தமது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் ஆதரவளிக்கும் AfD கட்சியானது பிப்ரவரியில் நடந்த பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. |