அமெரிக்காவில் 600 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

01.11.2021 13:10:20

சீரற்ற வானிலை காரணமாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றும் நேற்று முன்தினமும் 800 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1,500 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்யும் மழையுடன் கூடிய கடுமையான காற்று காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிறக்கப்போகும் புதிய மாதத்துடன் சேவைகள் படிப்படியாக வழமைக்கு கொண்டுவர முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.