
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
24.12.2021 11:48:44
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.