நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

04.11.2025 12:00:00

நேபாளத்தின் யாலுங் ரி (Yalung Ri) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

 

உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும் இரண்டு நேபாளிகள் அடங்குவதாகவும் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊடக அறிக்கைகளின்படி, யாலுங் ரி மலையில் உள்ள ஒரு முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் கிழக்கு நேபாளத்தில் ஐந்து வெளிநாட்டினர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

5,630 மீட்டர் (18,471 அடி) உயரமுள்ள யாலுங் ரி மலையில் ஏறிக்கொண்டிருந்த 15 பேர் கொண்ட குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், பயணத்தில் நான்கு பேர் எஞ்சியுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தில் மூன்று பிரான்ஸ் நாட்டினர் , ஒரு கனடியன், ஒரு இத்தாலியன் மற்றும் இரண்டு நேபாளிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.