இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன்
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டெஸ்ட் டெஸ்ட் 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளனர். டெஸ்ட் டெஸ்ட் அதன்படி இப்படத்தில் என் உச்சி மண்டைல, மக்காயல, அக நக உள்ளிட்ட பல பாடல்களை பாடிய பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.