ராகவா லாரன்ஸ் நடிக்கும் "துர்கா"

07.08.2021 15:05:27

 

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து, இயக்கும் "ருத்ரன்" படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , கதிரேசன், வெற்றிமாறன் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் "அதிகாரம்" படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுதவிர சந்திரமுகி 2 படமும் கைவசம் உள்ளது.

இந்நிலையில் புதிதாக துர்கா என்ற படத்தில் நடிக்கிறார். இதை அவரே தனது ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தயாரிக்கவும் செய்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இரண்டு மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர். அனேகமாக இதுவும் பேய் தொடர்பான கதையாக இருக்கலாம் என தெரிகிறது.