அஜித்தின் ‘’குட் பேட் அக்லி’’ பட அப்டேட்

09.04.2024 00:19:27

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சமீபத்தில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

அதாவது, விஷால்- எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான  ‘ மார்க் ஆண்டனி ’என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்  அஜித்தின் அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ படத்தை இயக்கவுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில்  நடக்கிறது என்ற தகவல் வெளியானது.

அதாவது சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பகுதியில் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடக்கவுள்ளதாம். அங்கு 30 நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு, ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடக்குமாம். அதன்பின், மொத்த படக்குழுவும் ஜப்பான் நாட்டிற்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

'குட் பேட் அக்லி 'படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.