ஆப்கன் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆதரவு

05.10.2021 14:19:00

தலிபான்களுடனான போரின்போது அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதி அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படையினர கடந்த ஓகஸ்ட் இறுதியில் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினருக்கு மொழிபெயா்ப்பு உள்பட பல்வேறு பணிகளில் அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர். தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படையினருக்கு உதவிய ஆப்கன் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, அவரகளை தங்கள் நாட்டில் குடியேற்ற அமெரிக்கா முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் அமெரிக்காவுக்கு முதல்கட்டமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதில், ஆப்கன் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு 72 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி இந்த ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், 9 சதவீத அமெரிக்கர்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.