பிரதமர் மோடி படத்தை சேதப்படுத்திய கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போராட்டம்

11.09.2022 10:45:15

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி னார். அந்த யாத்திரை ஜோடோவா ஜொடோ

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கினார். அந்த யாத்திரை ஜோடோவா ஜொடோ யாத்திரையா. தற்பொழுது குமரி மாவட்டத்தை கடந்து கேரளாவிற்கு சென்று உள்ளார். ஆனால் அவர் பெரியார் மண்ணில் இருந்து வருத்த்துடன் கடந்து செல்வதாக தெரிவித்து உள்ளார்.

இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரா தேசியவாதியா என்று தெரியவில்லை. கேரளாவுக்குள் நுழைந்ததும் அவர் நாராயண குரு மண்ணில் கால் பதிப்பதாக கூறியுள்ளார். அவர் பெயரை அங்கு கூறாவிட்டால் கேரளாவில் கால் வைக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். தமிழகத்தை கிள்ளுக்கீரையாக அவர் நினைத்ததால்தான் இப்படி பேசி இருக்கிறார்.

ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குமரி மாவட்டத்தில் ஒரு வாரம் தங்கி இருந்து அதற்கான திட்டமிடுதலை மேற்கொண்டார். கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் உள்ள பாலத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். அதற்கான கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டை சேதப்படுத்தி உள்ளனர்.

கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சி நடந்துள்ளது.இதற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பெயரை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் அந்த கல்வெட்டை சேதப்படுத்தியதாக புகார் மனு பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் படத்தை சேதப்படுத்திய கே.எஸ்.அழகிரி உட்பட நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதயாத்திரையின் போது கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர். இந்தப் பாதயாத்திரை ஒற்றுமைக்கான பயணம் அல்ல. கலவரத்தை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடை பயணம் ஆகும். எனவே பிரதமர் மோடியின் கல்வெட்டை சேதப்படுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் குமரி மாவட்ட பாரதியஜனதா சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.