வடக்கு - கிழக்கில் காலூன்ற இந்தியா தயார்!

07.07.2022 10:15:28

வடக்கு - கிழக்கில் இந்தியா 

வடக்கு - கிழக்கில் இந்தியா பொருளாதாரத்தினை மையமாக பயன்படுத்தி காலூன்ற ஆரம்பித்துள்ளதாக  அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தோ - பசுபிக் சமுத்திரத்தில் இன்று ஏற்பட்டுள்ள கேந்திர முக்கியத்துவம் தமிழர் பகுதிகளுக்கும், இந்தியாவிற்கும் சமமாக உள்ளது.

இந்தியாவிற்கான பெறுமதியும், கேந்திர தன்மையும்

இவற்றில் தமிழர் பகுதிக்கான பெறுமதி சிறியளவில் காணப்படுகின்றமையினால், இந்தியாவிற்கான பெறுமதியும், கேந்திர தன்மையும் அதிகரித்துள்ளது.

இந்த பெறுமதியை இந்தியா எவ்வாறு கையாளுகின்றது என்பது தான் பிரச்சினை

இவை இந்தியாவில் உயரும் பட்சத்தில் இந்தியா வடக்கு கிழக்கில் காலூன்ற ஆரம்பிக்கும் என்பதே உண்மை.