தேவா இன்று அரச மரியாதையுடன் விடைபெறுகிறார்

18.10.2026 13:04:07

மறைந்த திரைப்பட இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பூத உடல் இன்று அரச மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

 

இசையமைப்பாளர் தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் உள்ள அவரது தோட்டத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தும் நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ரங்கநாதர் கோவில் அருகே வைக்கப்படும் என தெரிரிவிக்கப்பட்டுள்ளது.

 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கனோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தலைமையில் 250 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று இரவு முழுவதும் ஆற்காட்டில் கனமழை பெய்ததன் காரணமாக, அவரது உடல் அடக்கம் செய்ய உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

தேனிசைத் தென்றல் தேவா தனது 76 வயதில் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.