பட்டைய கிளப்பும் மாஸ்டர்.... 10 நாளில் 200 கோடி வசூல்

22.01.2021 11:32:55

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் 10 நாளில் 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அதன்படி 10 நாட்களில் இப்படம் உலகளவில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் வசூல் திரையுலகினர் பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.