23 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார் சசிகலா!
|
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி உள்ளார். இவர் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்து உள்ளார். இந்நிலையில் தான் சசிகலா தனது கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பி உள்பட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளின் வேட்பாளர்களையும் சசிகலா அறிவித்துள்ளார். |
|
இதுதொடர்பாக அனைந்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 23:04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திருத்தணி - அரசு முன்னாள் தலைமை கொறடா பிஎம் நரசிம்மன கள்ளக்குறிச்சி (தனி) - முன்னாள் அமைச்சர்எம் ஆனந்தன் சங்கரன் கோவில் (தனி) - முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் மதுரை மத்தி - சக்கரவர்த்தி திருப்பரங்குன்றம் - தனபாண்டியன் திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார் மேலூர் - சோனியா காந்தி மானாமதுரை (தனி)- திலக்ராஜ் பரமக்குடி (தனி) - அமிர்தா பாலுசாமி ராஜபாளையம் - ஹரிஷ் முதுகுளத்தூர் - ராம்குமார் பாண்டியன் நாங்குநேரி - வெள்ளைத்துரை (ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி) சிவகங்கை - பிரபு குளச்சல் - கிறைஸ்ட் மில்லர் சிவகாசி - நேஷனல் கணேசன் திண்டுக்கல் - ராமுத்தேவர் மயிலாடுதுறை - சுதாகர் மன்னார்குடி - ராசுப்பிள்ளை ஸ்ரீரங்கம் - விஜய் திட்டக்குடி (தனி) - பழனிவேல் ஸ்ரீபெரும்புதர் (தனி) - புருசோத்தமன் திருச்சி கிழக்கு - நந்தக்குமார் உள்ளிட்டவர்கள் சசிகலா கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். |