அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்

10.08.2023 09:38:09

அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது. ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.