காஷ்மீருக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி

10.08.2021 08:10:22

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ராகுல் காந்தி, குலாம் அகமதுவினுடைய மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதுடன் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதன்பின்னர், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுவார் எனவும் கூறப்படுகின்றது.