நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!
26.12.2022 20:19:26
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு எதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் மருத்துவமனையில் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.