
2 மணிநேரம் ஆலோசனை!
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளார். இவர்களுடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இணைந்து கொண்டார். |
சுமார் 2 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, சட்டமா அதிபரும் நீதி அமைச்சரும் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில், சாட்சியங்களை மறைத்தல் மற்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் ஒரு கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |