ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை

15.03.2024 08:32:13

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஏறிய வேகத்தில் தற்போது தங்கம் விலை இறங்கி வருகிறது என்பதும் நேற்று ஒரு கிராமுக்கு 25 ரூபாய் இறங்கிய நிலையில் இன்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாய்க்கு இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மாற்றம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,125 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 49,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,595  எனவும் ஒரு சவரன் ரூபாய் 52,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது