அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு புடின் இரங்கல்!

02.12.2025 13:55:32

நாட்டில் அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தனது இரங்கலை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ளார்.

இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கையுடன், ரஷ்யா ஒன்றித்து நிற்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவிக்குமாறு ஜனாதிபதி அநுரவிடம், ரஷ்ய ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.