எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
14.12.2021 09:26:02
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 எம்பிக்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதில்லை, எதிர்க்கட்சிகளின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்க பார்க்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.