மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

20.12.2021 10:28:47

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது பேசிய அவர்; பெண்களின் வங்கி கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பெண்களின் கல்வி முன்னேற்றம் அதிகரித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா காலத்தில் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, சோக்ஸி உள்ளிட்டோரிடம் ரூ,13,000 கோடி சொத்துக்கள் விற்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது என கூறினார்.