கென்யாவில் வெடிப்புச் சம்பவம்

04.02.2024 13:36:27

கென்யாவின் தலைநகர் நைரோபியில், எம்பகாசி எனும் மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 220 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தையடுத்து அருகிலுள்ள கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் பாரிய தீப்பிளம்பும் ஏற்பட்டுள்ளது.

வீடுகள், தொடர்மாடிக் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் இதனால் சேதமடைந்துள்ளன.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் குறித்த பகுதிக்கு பொது மக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.