ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

23.09.2025 07:52:57

ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என பாலஸ்தீனத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இரு-அரசு கொள்கையை வெளிப்படையாக அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தின் பிற ஆயுதமேந்திய குழுக்கள் தங்கள் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பாலஸ்தீன ஆணையத்தின் தலைவர்(Palestinian Authority (PA) President Mahmoud Abbas) மஹ்மூத் அப்பாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம் பெறுவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் பேசிய மஹ்மூத் அப்பாஸ், எதிர்வரும் காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸின் பங்கு எதுவும் இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

மேலும் ஆயுதங்கள் இல்லாத, அதே சமயத்தில் சட்ட பாதுகாப்பு கொண்ட ஒரு பாதுகாப்பு படை கொண்ட அரசாங்கத்தை விரும்புவதாகவும் மஹ்மூத் தெரிவித்துள்ளார். அத்துடன் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.