லங்கா ஐஓசி நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!
01.08.2023 11:22:39
லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இன்ற நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோல், ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.
சூப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.