யாழ். மாவட்ட நிரந்தர அரச அதிபராக பிரதீபன் நியமனம்!

20.06.2025 14:43:36

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று (20) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது. இதேவேளை, கடந்த 2024 மார்ச் 09ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் மாவட்ட செயலராக அவர் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.